வைகல்மாடக்கோயில்

இறைவர் திருப்பெயர்: சண்பகாரண்யேஸ்வரர், வைகல்நாதர்.
இறைவியார் திருப்பெயர்: சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை, வைகலாம்பிகை.
தல மரம்: சண்பகம் (தற்போதில்லை).
தீர்த்தம் :
வழிபட்டோர்: சம்பந்தர்,இலக்குமி.

 

தல வரலாறு

      • ஊர் – வைகல்; கோயில் – மாடக்கோயில்.

 

      • இக்கோயிலில் இலக்கு வழிபட்டு பேறு பெற்றாள்.

 

தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - துளமதி யுடைமறி தோன்று.

 

சிறப்புக்கள்

      • இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன:- 1. விசுவநாதர் ஆலயம் – ‘வளநகர் ‘ என்று இப்பகுதி வழங்குகிறது – திருமால் வழிபட்டது, 2. பிரமபுரீசுவரர் ஆலயம் – தற்போது சிறப்பாக உள்ள கோயில் – பிரமன் வழிபட்டது, 3. வைகல்நாதர் ஆலயம் – இதுவே மாடக்கோயில்; பாடல் பெற்றது.

         

      • சண்பகாரண்யம், நித்யவாசபுரம் முதலயன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
      • மூலவர் – சுயம்பு மூர்த்தி; அழகான பாணம்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சியநல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் ‘நாட்டார் வாய்க்கா ‘லைக் கடந்து, பழியஞ்சியநல்லூரை அடைந்து, மேலும் 2 கி. மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். (நாட்டார் வாய்க்கால் மீது உள்ள பாலம் குறுகலானது; ஆதலின் பேருந்து செல்லாது.) தொடர்புக்கு :- 0435 – 246 5616.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com