பாதமும் !! செல்வ வசியமும் !!

*நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும்.* 
*இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை தொட்டு வணங்குவோம்,*
 *அவ்வாறு செய்யாமல் அவமதிப்பாய் இருந்தால் லட்சுமி விலகி நம் கால் யார் மீது பட்டதோ அவர்களிடம் சென்று விடுவார்கள்.*
என் சாண் உடம்பிற்கு சிரசே தலைமை என்றாலும் பாதமே பூஜையை பெரும் சிறப்பு பெற்றதாகும், இந்த பாதம் மூவுலகையும் அளந்த பெருமையும். பாதம் உலகை ஆண்ட பெருமையும் புராணங்களில் படித்திருப்போம், ஆக இந்த பாதத்திற்கு இவ்வளவு மரியாதை ஏனெனில் அதுவே செல்வம் தரும் யோகம் தரும் மகாலட்சுமி குடிகொள்ளும் பாகமாகும்.

பசுவாய் இருந்தாலும் அதன் பாதத்தில் லட்சுமி குடி கொள்கிறாள், புதுமனை கிரஹ பிரவேஷத்தின் போது பசுவின் பாதம் படவே முதலில் இல்லத்திற்கு பசு கன்றை அழைத்து வருவார்கள், 
அதே போல் புதுமணப்பெண் புகுந்த வீட்டிற்கு வரும் போது தலைவாயிற் படியில் படி நெல்லை வைத்து கையிருக்க காலால் உள்புறமாக தட்டி நெல்லை தரையில் கொட்ட வைத்து உள்செல்லும் பழக்கமும் உள்ளது, ஏன் இதை கையால் தட்டக் கூடாதா கால்களால் ஏன் உதைத்து தட்ட வேண்டும் என்ற வினா எழுப்பலாம், 
முதலிலேயே கூறினேன், உடலில் பாதமே மிகுந்த மரியாதையானது அதுவே மகாலட்சுமி பாகம் என்றும் கூறியிருந்தேன் அதுவே காலால் உதைத்து நெல்லை கொட்ட காரணமாகும்,
யாரையும் தலையை தொட்டு வணங்கினால் அவமதிப்பு செய்வதாக எண்ணுவார்கள், அதுவே குனிந்து காலை தொட்டு வணங்கும்போது அவர்கள் உடனே குனிந்து நம்மை எழுப்பி மனப்பூர்வமாக நம்மை ஆசீர்வதிப்பார்கள், ஆக பாதமே மரியாதையான லட்சுமி ஸ்தானமாகும்.

அதன் சுத்தத்திலே தான் செல்வம் உள்ளது, அதன் பணிவான நடையில்தான் ஐஸ்வர்யம் உள்ளது, சக்தி நடையான அதிர்ந்து நடப்பது தரித்திரம் பீடிக்கும்.
லட்சுமி நடையான மெல்ல சத்தமின்றி பூமிக்கு அழுத்தமின்றி நடப்பதால் அதிஷ்டம் குடிகொள்ளும்,
அதனால்தான் பூமியை அதிர்ந்து உதைக்கவோ நடக்கவோ கூடாது என்பார்கள், குறிப்பாக குதிக்கால் மிக முக்கிய யோகலட்சுமி வாழும் இடமாகும்.

இதனால் பூமியை யார் உதைத்தாலும் நிச்சயம் உடனே தரித்திரம் பிடிக்கும், எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டிய பகுதி நம் குதிக்கால் (பின்னங்கால்) ஆகும், 
காலை கழுவும் போது குதிக்காலை விட்டு மற்ற இடங்களை மட்டும் கழுவினால் தரித்திரம் பிடிக்கும், இதை பயமுறுத்தியாவது காலை சுத்தமாக கழுவச் செய்ய நம் முன்னோர்கள் ஒரு பயமுறுத்தலான தகவலை கொண்டு வந்தார்கள்.

அதாவது பின்னங்காலை கழுவவில்லை எனில் சனிஸ்வர பீடை பிடித்து விடும், பாத சனி பாடாய் படுத்தும், என்றெல்லாம் பயமுறுத்தி காலை சுத்தமாக வைத்துக் கொண்டு லட்சுமி அருளை பெற வேண்டும் என்ற நோக்கில் கூறியிருக்கிறார்கள், 
இன்று இதையாரும் கண்டுகொள்வதில்லை, அதனால்தான் செல்வமும் தங்குவதில்லை . குடும்பத்தில் திருமணம் காலா காலத்திற்கு நடப்பதில்லை, பல சங்கடமான பலன்களை எல்லாம் அனுபவிக்கிறார்கள், காரணம் லட்சுமி ஸ்தானங்களை அறிந்து அதை சுத்தமாக வைத்துக் கொள்ளாததே முக்கிய காரணமாகும் .
வேறொரு தகவலையும் அறியுங்கள், விஷயம் அறிந்தவர்கள் யார்மீதும் எதன்மீதும் உதாசீனமா தன் கால் படாதவாறு நடந்து கொள்வார்கள், 
அதே போல் அனாவசியமாக தன் பாதங்களை இன்னொருவர் தொட்டு வணங்க அனுமதிக்க மாட்டார்கள், தன் அதிஷ்டம் அவர்களுக்கு போய்விடுமோ என்ற அச்சமும் அதற்கு முக்கிய காரணமாகும் . 

ஞானியர் கூட பிறரை தன்பாதத்தை தொட அனுமதித்ததில்லை காரணம் சுத்தமான மகாலட்சுமி ஸ்தானத்தை பாவப்பட்ட மனிதன் தொட்டு விட்டால் அதன் புனிதம் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவ்வாறு கடைபிடித்துள்ளார்கள்.
வெளியில் சென்று வந்தாலே சுத்தமாக கால்களை கழுவியே உள்ளே செல்வார்கள், திருஷ்டிக்கு சுற்றிப்போட்டதை கால்களால் மிதிக்க மாட்டார்கள், காலே படாதவாரே நடந்து செல்வார்கள், 
ஒரு காலை கொண்டு இன்னொரு காலை தேய்க்க மாட்டார்கள், அனாவசியமாக கால்மேல் கால் போட்டு ஆட்டமாட்டார்கள், இவைகளெல்லாம் நாமும் பின்பற்றினால் மிக உயர்ந்த செல்வ சந்தோஷ நிலைக்கு உயரலாம் . 

பாதம் தானே என உதாசினமாய் இருக்கக் கூடாது .நம் முழு உடல் எடையும் தாங்கி முன்னோக்கி நடத்தி செல்லும் முக்கிய உறுப்பே பாதம் தான். அதுவே வணங்குதற்குரிய ஸ்ரீ லட்சுமி பாதமாகும் . 
எனவே சுத்தமாக இருந்து தரித்திரத்தை போக்கி வளமாய் வாழுங்கள், தூங்கும் போது கால் மேல் போட்டு தூங்குவது எவ்வித குற்றமும் ஆகாது, எனினும் தூக்கத்தில் கூட குதிக்காலால் பூமியை தேய்க்கக்கூடாது செல்வம் வற்றிவிடும் கவனம்.

தசாவதார ஆலயங்களில் இன்றும் பாதுகாவை (பாதம் பதித்த கிரீடம்) கொண்டே ஆசீர்வாதம் செய்கிறார்கள், இதைக்கூற காரணம் பாதத்தின் பெருமையை நாம் உணர்ந்து செயல்படவே.
நினைவுபடுத்துகிறோம், பாதங்களில் வலது பாதம் லட்சுமி நாராயணன் ஆவார்கள், தம்பதி சமேதராய் உள்ள பாதத்தையே முதலில் அடி எடுத்து வைத்து வர முக்கியத்துவம் கொடுப்பார்கள், இடது பாதம் லட்சுமியும் மூதேவியும் குடி கொள்ளும் இடமாகும், கால் பதிக்கும் இடம் பாவம் நிறைந்ததாகவோ சுத்தமற்றதாகவோ இருந்தால் முதலில் மூதேவியே இறங்கி அவ்விடத்தில் குடிகொண்டு ஆசீர்வதித்து விடுவார்கள்.

அந்த பயத்திலேயே யாவரும் வலது காலை எடுத்து வைத்து வர விரும்புகிறார்கள். இன்று கால போக்கில் ஏன் என்று அறியாமலேயே பழகி போன நல்ல பழக்கமாக உள்ளது .புராணங்களில் பாதமகிமையை பற்றி பல தகவல்கள் உள்ளன.
“குரு திருவடிகளே சரணம்”
 

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com