பெண்களுக்கான ஆன்மிக சாஸ்திர குறிப்புகள்

பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக சாஸ்திர குறிப்புகள் சில உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் சுபமங்களம் உண்டாகும்.

பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.

குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலிச்சரட்டில் பஞ்ச பூத சக்திகள் அதிகம்.

தாலி என்பது ஒரு மங்கலப் பொருள். எனவே அணிகலன்களைப் போல் தினமும் அதைக்கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.

காலையில் அடுப்பு பற்ற வைக்கும்பொழுது அக்கினியை வணங்கி இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு ரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்.

மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலே தான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.

முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது. இழுத்து சொருக வேண்டும். முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடிவிடும் என்பார்கள்.

குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.

தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலம் போடக்கூடாது. போடுகின்ற கோடு தெற்கு பக்கமாய் முடியக்கூடாது.

ஆலயத்தில் சுவாமி கும்பிடும்போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன்நெற்றி தரையில் தொட உடல் முழுவதும் தரையில் படுமாறு விழுந்து வணங்க வேண்டும்.

பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது இடது கைக்கும், வலது கைக்கும் நடுவில் முந்தானைத் துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.

சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது தெற்கு முகமாக உட்கார்ந்து சிறிது மஞ்சளைத் தேய்த்து முகத்தில் பூசிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com