ஸ்ரீ திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம், பாடி (சென்னை)

ஸ்ரீ திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம், பாடி (சென்னை)

சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் குரு தலங்கள் இரண்டு உண்டு அவைகள் 1 . ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் , போரூர் .2 . திருவாலீஸ்வரர் கோயில் ,பாடி

இறைவன்: வலிதாய நாதர், வல்லீஸ்வரர்.

இறைவி: ஜகதாம்பாள், தாயம்மை.

தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை.

தல தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம்.

ஆகமம்: காமீகம்.

ஆலயப் பழமை: 2000 ஆண்டுகள் முற்பட்டது

தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்.

திருவிழாக்கள்: சித்திரையில் பிரமோற்சவம்,தை கிருத்திகை,குரு
பெயர்ச்சி

தேவார பாடல் பெற்ற தொண்டைநாட்டு தலங்களில் 21 வது தலமாகும் . பாடல் பெற்ற 274 சிவதலங்களில் 252 வது தேவார தலமாகும்

பெயர்க்காரணம்:
பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது .

பாரத்வாஜ தீர்த்தம்:

ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி உருவம் பெற நேர்ந்தது.

சாபம் நீங்கப் பெற்றார் அவர் (கருங்குருவி) திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார்.

நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறானது அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது என்பர்.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது.

விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும்.

ஆனால், நல்ல வரன் அமைய வியாழக் கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

தல சிறப்பு:
இக்கோவிலில் குரு பகவான் தவம் புரிந்து காமத்தீயை வென்றவராவார். திருமால், அனுமன், சுக்ரீவன், ராமபிரான், லவகுசலர் முதலியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம் இது. அகத்திய முனிவர் வில்வலன், வாதாபி ஆகியோரை கொன்ற பாவம் நீங்க இத்தலத்தப் பெருமானை வழிபட்டு பேறு பெற்ற தலமும் இது.

தல பெருமை:
திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என வழங்கப்படுகிறது.

வியாழ பகவானின் மகன்களாக பரத்வாஜர், கரிக்குருவி என்கிற வலியன் ஆகியோர் பிள்ளைகளாக பிறந்தார்கள்.

பரத்வாஜர் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தம் அடைந்து, பல புண்ணிய தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார்.

அவர் இங்கு வந்த போது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். இதனால் இத்தலத்தில் புறாக்கள் அதிகம் காணப்பெறலாம்.

எனவே தான், இத்தலம் “திருவலிதாயம்”என்றும் சிவன் “வலியநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மன் தவப்புதல்வியரான கமலை, வள்ளி என்னும் இருவரையும் விநாயகப்பெருமான் இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.
இத்திருத்தலத்தில் சாப விமோசனம் பெற்றவர்களின் பட்டியல் அகத்தியர் , சந்திரன் , யமன் , அக்னி , ராமர் , அனுமான், லவகுசர்கள் , மன்மதன் , இந்திரன் திருமால் ஆகியோர்கள்  இது வியாழ பகவான் சாப விமோசனம் பெற்ற தலமாதலால் இது குருஸ்தலமாகவும் விளங்குகிறது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com