1) இந்திரலிங்கம் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இவரை முதலில் வணங்கிய பின்னரே கிரிவலம் ஆரம்பிக்க வேண்டும். தொடர்புடைய கிரகங்கள் சூரியன் சுக்கிரன்.
2) அக்னி பகவான் பிரதிஷ்டை செய்த அக்னி லிங்கம் தொடர்புடைய கிரகம் சந்திரன்.
3) எம லிங்கம் எமதர்மன் பிரதிஷ்டை செய்த லிங்கம். செவ்வாய் இதனுடைய கிரகம்
4) நிருதி லிங்கம் நிருதி ஸ்தாபித்த இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் ராகு.
5) வருண லிங்கம் வருண பகவான் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திற்கு தொடர்புடைய கிரகம் சனி.
6) வாயு லிங்கம் வாயு பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் கேது.
7) குபேர லிங்கம் குபேரன் ஸ்தாபித்த இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் குரு.
8) ஈசான்ய லிங்கம் ஈசானன் ஸ்தாபித்த இந்த லிங்கத்திற்கு தொடர்புடைய கிரகம் புதன். சுடுகாட்டில். உள்ள இந்த எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கத்தை தரிசித்து அண்ணாமலை கோவிலுக்குள் சென்று நந்தியை முதலில் வணங்கி இறைவனையும் இறைவியையும் தரிசித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். திருச்சிற்றம்பலம்
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.